< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
விருதுநகர்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
7 March 2023 12:20 AM IST

அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவில், விஜயரங்கபுரம் ராஜகாளியம்மன் கோவில், விஜயகரிசல்குளம் துர்க்கை அம்மன் கோவில், கணஞ்சாம்பட்டி பாதாள துர்க்கை அம்மன் கோவில், வனமூர்த்தி லிங்கபுரம் காளியம்மன் கோவில், துலுக்கன்குறிச்சி காளியம்மன் கோவில், வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், கீழச்செல்லாபுரம் செல்லியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்