< Back
மாநில செய்திகள்
வைக்கோல் போருக்கு தீவைப்பு
கடலூர்
மாநில செய்திகள்

வைக்கோல் போருக்கு தீவைப்பு

தினத்தந்தி
|
10 July 2023 12:39 AM IST

ராமநத்தம் அருகே வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே அரங்கூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் அங்குள்ள ராமநத்தம்-விருத்தாசலம் சாலையோரமாக வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்த வைக்கோல் போர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 100 வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முதல் கட்ட விசாரணையில் வைக்கோல் போருக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரித்தது என தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்