< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திடீர் பணிநீக்கம் செய்ததால் விரக்தி... பெட்ரோல் பாட்டிலுடன் திரண்ட 50 பேர் - கடலூரில் பரபரப்பு
|19 Jun 2023 3:27 PM IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், திடீரென ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், திடீரென ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் போலீசார், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.