< Back
மாநில செய்திகள்
செல்போன் வாங்கித் தராததால் விரக்தி.. வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்த  அதிர்ச்சி
மாநில செய்திகள்

செல்போன் வாங்கித் தராததால் விரக்தி.. வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தினத்தந்தி
|
5 Jun 2024 5:15 AM IST

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை,

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். அவர், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பு செல்கிறார். பள்ளிகள் 10-ந்தேதிதான் திறக்கப்படுவதால் வீட்டில் இருந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் விரக்தி அடைந்த மாணவி, பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.எங்கு தேடியும் மகளை காணாததால் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மாணவி வீட்டுக்கு திரும்பி வந்தார். இதுபற்றி மாணவியிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றதும், அதே மாவட்டம் ஒட்டம்பட்டியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அங்கு சென்றபோது வரதராஜ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வரதராஜை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்