< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் பஸ் மோதி பழ வியாபாரி பலி
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் பஸ் மோதி பழ வியாபாரி பலி

தினத்தந்தி
|
27 Oct 2022 11:39 AM IST

மதுரவாயலில் பஸ் மோதி பழ வியாபாரி பலியானார்.

திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அருகே சென்றபோது ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கம்பெனி பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த வியாபாரி தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான மணிபாலன் (29), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்