< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு
அரியலூர்
மாநில செய்திகள்

போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு

தினத்தந்தி
|
27 March 2023 12:40 AM IST

போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து போலீசார் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும், அவர்களுக்கு கோடை காலம் முடியும் வரை நீர்மோர், பழச்சாறு, இளநீர் வழங்குமாறு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டார். அதன்படி ஜெயங்கொண்டம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கினார். அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிரா பானு, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் உடனிருந்தனா். இதேபோல் அரியலூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்குவரத்து போலீசாருக்கு இளநீர் வழங்கினார்.

மேலும் செய்திகள்