தூத்துக்குடி
மெஞ்ஞானபுரத்திலிருந்து காயாமொழி இணைப்பு சாலை பணி..!!
|மெஞ்ஞானபுரத்திலிருந்து காயாமொழி இணைப்பு சாலை பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரத்திலிருந்து காயாமொழி இணைப்பு சாலை, வள்ளியம்மாள்புரத்தில் இருந்து காயாமொழி வரை 7.2கி.மீ. தூரத்துக்கு ரூ.6.3கோடி மதிப்பில் சாலை பணி நடைபெற உள்ளது. அதற்கான பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் அந்த பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வதுபிறந்த நாளை முன்னிட்டு சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், யூனியன் தலைவர்கள் பாலசிங், ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.