< Back
மாநில செய்திகள்
மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து
மதுரை
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
20 Oct 2023 3:30 AM IST

மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.


மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 4.25 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய தனியார் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்து இங்கு வரவில்லை. இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு 5 மணிக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுபோல் அந்த விமான நிறுவனத்தின் சார்பில் 7 மணிக்கு சென்னைக்கான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர மதுரையில் இருந்து 9 மணிக்கு சென்னை செல்லும் மற்றொரு தனியார் விமானமும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த 3 விமானங்களில் முன்பதிவு செய்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதிப்பட்டனர். தாங்கள் திட்டமிட்டபடி பயணத்தை அவர்களால் தொடர முடியாமல் போனது.

மேலும் செய்திகள்