< Back
மாநில செய்திகள்
19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார்
மாநில செய்திகள்

19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார்

தினத்தந்தி
|
12 Jan 2023 6:15 AM IST

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கட்சியின் அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எந்தெந்த தொகுதியில் யார் பேசுகிறார்கள் என்ற விவரத்தை அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார். 19-ந் தேதியன்று அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் (நாகப்பட்டினம்), துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, இயக்குனர் பவித்ரன் (சிதம்பரம்), அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், நடிகை பபிதா (ராயபுரம்), அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா (வேளச்சேரி), அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா (மதுரவாயல்), மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, மகளிர் அணி துணை செயலாளர் ஏ.நூர்ஜகான் (மாதவரம்),

மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், நடிகை டி.எமி (காஞ்சீபுரம்), தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பி.கிஷோர் (ஆயிரம்விளக்கு), இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் (ஆர்.கே.நகர்), செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, வக்கீல் பிரிவு துணை செயலாளர் வி.எஸ்.நாராயணராவ் (தாம்பரம்), அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஏ.ஜெயபால் (சோழிங்கநல்லூர்) பேசுகின்றனர்.

20-ந் தேதியன்று செய்தித்தொடர்பாளர் சி.பொன்னையன் (அம்பத்தூர்), அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா (எழும்பூர்), அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், மகளிர் அணி இணைச்செயலாளர் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு (உத்திரமேரூர்), சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் எஸ்.அப்துல் ரஹீம் (பெரம்பூர்), செய்தித்தொடர்பாளர் வக்கீல் கே.சிவசங்கரி (கொளத்தூர்), வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வி.ஆர்.திருநாராயணன் (விருகம்பாக்கம்) பேசுகின்றனர்.

21-ந் தேதியன்று மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி (பூந்தமல்லி), முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி (செங்கல்பட்டு), முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் (வில்லிவாக்கம்), அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன் (தியாகராயநகர்), மகளிர் அணி துணைச்செயலாளர் டி.சகுந்தலா (மயிலாப்பூர்), மீனவர் பிரிவு துணை செயலாளர் ஜே.சுரேஷ் (சைதாப்பேட்டை) பேசுகின்றனர். 22-ந் தேதியன்று ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.ஏ.கே.முகில், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர் பேசுகின்றனர்.

மேலும் செய்திகள்