< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் அடிக்கடி சர்வர் பழுது
விருதுநகர்
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் அடிக்கடி சர்வர் பழுது

தினத்தந்தி
|
13 March 2023 7:47 PM GMT

திருச்சுழி பகுதிகளில் ரேஷன் கடைகளில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருச்சுழி,

திருச்சுழி பகுதிகளில் ரேஷன் கடைகளில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சர்வர் பழுது

திருச்சுழி பகுகளில் உள்ள கிராம பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு முறை நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரம் வைக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்யப்படுவதோடு குடும்பத்தலைவரின் விரல்ரேகையும் பதிவு ெசய்யப்படுகிறது.

இதன் மூலம் தினமும் 200 ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க முடிந்தது. பின்னர் அடிக்கடி சர்வரில் பிரச்சினை ஏற்பட்டு பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. திருச்சுழி பகுதி முழுவதும் பெரும்பான்மையான ரேஷன் கடைகளிலும் இதே நிலைமை தான் நிலவுகிறது.

பொதுமக்கள் அவதி

இதனால் ஸ்மார்ட் கார்டு ஸ்கேனர், கைரேகை பதிவு செய்ய முடியவில்லை. மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர் பழுதினால் விற்பனையாளர்கள், பொதுமக்களிடம் நாளை வருமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது.

சர்வர் பழுதினால் தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சர்வர் பிரச்சினையால் பெரும்பாலானோர் மாத இறுதிக்குள் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் பொருட்கள் வாங்காமலேயே கணக்கு முடிக்கப்பட்டு விடுகிறது.

இதேநிலை நீடித்தால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி, சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை நம்பி வாழ்கின்ற மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சர்வர் பிரச்சினையை சரி செய்து மக்களுக்கு சிரமமின்றி ரேஷன் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்