< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை
|20 Aug 2023 12:15 AM IST
திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பகலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் பகலில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்சாதன பொருட்களும் பழுதாகிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.