< Back
மாநில செய்திகள்
பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
மாநில செய்திகள்

பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

தினத்தந்தி
|
25 Jun 2022 9:42 AM IST

பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் விபத்துக்குள்ளானதில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

கேரள மாநிலம், பாலக்காடு சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). இவர் கிளீனராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரபி. டிரைவர் .இவர்கள் இருவரும் சரக்குவேன் ஒன்றில் நேற்று கேரளாவில் இருந்து கறிக்கோழி லோடு ஏற்றுவதற்காக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கவுண்டம்பாளையம் பிரிவு என்ற இடத்தின் அருகே வந்த போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் சீனிவாசன் என்பவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். காயம் அடைந்த ரபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்