< Back
மாநில செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்து மாணவர்கள் ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்து மாணவர்கள் ஊர்வலம்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

கம்பத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி வீரர்களின் வேடமணிந்து மாணவ, மாணவிகள் ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கம்பத்தில், பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடம் அணிந்து, சிலம்பம் சுற்றி, பறை அடித்து, நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு பேச்சுபோட்டி, ஓவியபோட்டி, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முடிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்