< Back
மாநில செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர்கள் குறைகேட்பு நாள் கூட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைகேட்பு நாள் கூட்டம்

தினத்தந்தி
|
12 Aug 2022 10:30 PM IST

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு தியாகிகள் ஓய்வூதிய தொகை, இலவச வீடு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டறிந்த கலெக்டர் உடனடியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தனிநபர் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் மனு அளிக்கும்படி தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர், 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து, தேசிய கொடி வழங்கி கவுரவித்தார்.

மேலும் செய்திகள்