< Back
மாநில செய்திகள்
இலவச வேட்டி-சேலை உற்பத்தி பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும் - அமைச்சர் காந்தி பேட்டி
ஈரோடு
மாநில செய்திகள்

இலவச வேட்டி-சேலை உற்பத்தி பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும் - அமைச்சர் காந்தி பேட்டி

தினத்தந்தி
|
21 Jun 2023 9:10 PM GMT

இலவச வேட்டி-சேலை உற்பத்தி பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும் என அமைச்சர் காந்தி தொிவித்தாா்

இலவச வேட்டி-சேலை உற்பத்தி பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் காந்தி கூறினார்.

இலவச வேட்டி-சேலை

ஈரோட்டில் கோ-ஆப்டெக்ஸ் நவீனமாக்கப்பட்ட விற்பனை நிலையத்தை, தமிழக துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடியே 66 லட்சம் நஷ்டத்தில் இருந்தது. அதை மாற்றி தற்போது ரூ.10 லட்சம் லாபத்தில் செயல்படுகிறது. ரூ.180 கோடியாக இருந்த விற்பனையை கடந்த ஆண்டு ரூ.200 கோடியாக மாற்றி, இந்த ஆண்டில் ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு டெண்டர் கோரி உள்ளோம். வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் பணி தொடங்கி, டிசம்பர் மாதத்துக்குள் பணி முடித்து ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

நூல் விலை

கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தலா 10 சதவீதம் கூலி உயர்த்தி உள்ளோம். கோ -ஆப்டெக்சில் 10 ஆண்டுக்கு மேலாக தற்காலிக பணியாளராக பணி செய்த 466 பேர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஜவுளித்துறைக்கு சவாலாக இருப்பது நூல் விலை ஏற்ற, இறக்கம் ஆகும். இது, மத்திய அரசின் கையில் உள்ளது.

ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டு சேலத்தில் ரூ.113 கோடி செலவில் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்