< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
இலவச கால்நடை மருத்துவ முகாம்
|28 Oct 2022 11:26 PM IST
கே.வி.குப்பம் அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கே.வி.குப்பம் அருகே முருக்கம்பட்டு ஊராட்சி பெருமாங்குப்பம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, குடற்புழுநீக்கம் உள்ளிட்ட மருத்துவம் செய்து, பண்ணை ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 156 விவசாயிகள் பங்கேற்றனர். 594 கால்நடைகள் கலந்துகொண்டன.
கே.வி.குப்பம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டி.காந்திமதி, மேல்மாயில் உதவி மருத்துவர் எம்.எல்.நரேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை ஆய்வாளர் எம்.சாந்தி நன்றி கூறினார்.