மயிலாடுதுறை
இலவச கால்நடை மருத்துவ முகாம்
|தில்லைவிடங்கன் ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.