< Back
மாநில செய்திகள்
போலீஸ்-சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணி காலியிடங்களுக்கு இன்று இலவச பயிற்சி வகுப்புகள்
அரியலூர்
மாநில செய்திகள்

போலீஸ்-சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணி காலியிடங்களுக்கு இன்று இலவச பயிற்சி வகுப்புகள்

தினத்தந்தி
|
24 Aug 2023 12:39 AM IST

போலீஸ்-சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணி காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூரில் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலை போலீஸ்காரர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்