திருவள்ளூர்
திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
|திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 621 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்கு கல்வித் தகுதி பட்டப் படிப்பு ஆகும்.
தேர்விற்கு tnusrb.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான நாள் 01-06-2023 முதல் 30-06-2023 வரை ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வாயிலாக நேற்று முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்கள் விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கற்போர் வட்ட மையத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.