< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
25 April 2023 3:17 PM IST

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும். வயதுவரம்பு 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். இந்த பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03-05-2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்