< Back
மாநில செய்திகள்
வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்

தினத்தந்தி
|
22 Sept 2023 5:04 PM IST

வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என்று கலெக்டர் கூறினார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான ஆதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களும் வருகிற 27-ந் தேதிக்குள் (புதன்கிழமை) bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என 3 நிலைகளில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வு வருகிற நவம்பர் மாதத்திலும், முதன்மை தேர்வு டிசம்பர் மாதத்திலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திலும் நடைபெறுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சி வகுப்புக்கான கட்டணம் தாட்கோ மூலம் ஏற்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்