< Back
மாநில செய்திகள்
ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச பயிற்சி வகுப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச பயிற்சி வகுப்பு

தினத்தந்தி
|
27 Sep 2023 5:13 PM GMT

எஸ்.பி.ஐ. வங்கி தேர்வில் வெற்றி பெற ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட உள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி தேர்வில் வெற்றி பெற ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட உள்ளது.

2 ஆயிரம் பணியிடங்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ), ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டே் பாங்க் ஆப் இந்திய வங்கியில் துணை மேலாளருக்கான 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் இன்றுக்குள்(புதன்கிழமை) bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

இப்பதவிக்கான தேர்வு முதற்கட்ட தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகள் என்ற நிலைகளில் நடைபெறும். இப்பதவிக்கான ஆரம்ப கால மாத ஊதியம் ரூ.41 ஆயிரத்து 960 ஆகும். மேலும் இந்த தேர்வுக்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி தாட்கோ சார்பில் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெற விரும்புபவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் ஏற்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்