< Back
மாநில செய்திகள்
மாமன்னன் படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாமன்னன் படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்

தினத்தந்தி
|
1 July 2023 2:09 AM IST

களக்காட்டில் மாமன்னன் படம் வெளியான தியேட்டரில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.

களக்காடு:

அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் களக்காடு தியேட்டரில் திரையிடப்பட்டது. இதையொட்டி களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் இனிப்பு வழங்கினார். தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்