< Back
மாநில செய்திகள்
இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
15 Jun 2023 12:30 AM IST

இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

காரைக்குடி,

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதையடுத்து காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார். விழாவில் நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன், கவுன்சிலர்கள் தெய்வானை இளமாறன், துரைநாகராஜ், விஷ்ணுபெருமாள், கார்த்திகேயன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்