< Back
மாநில செய்திகள்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம்

தினத்தந்தி
|
16 Jun 2022 4:30 PM GMT

செஞ்சியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கினார்

செஞ்சி

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கினார். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் புதிய மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி பேசினார். இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பள்ளி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்கள் மாணிக்கம், திலகவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்