< Back
மாநில செய்திகள்
முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
28 Jan 2024 4:37 PM IST

அறுபடை முருகன் கோவில்களுக்கு அழைத்துச்செல்லும் திட்டத்திற்கு 200 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

சென்னை,

மூத்த குடிமக்களை இலவசமாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லும் ஆன்மிக சுற்றுப்பயணத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் நிதியுடன் முதல் முறையாக மூத்த குடிமக்களை இலவசமாக அறுபடை முருகன் கோவில்களுக்கு அழைத்துச்செல்லும் திட்டத்திற்கு 200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த வகையில் சென்னை கந்தகோட்டம் பகுதியில் உள்ள கந்தசாமி கோவிலில் இருந்து பயணம் மேற்கொள்ள இருந்த மூத்த குடிமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, போர்வை உள்ளிட்ட பயணத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பயணத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, நடப்பு ஆண்டில் 1,000 பேரை அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுப்பயணமாக அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்