< Back
மாநில செய்திகள்
தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
19 Dec 2022 12:45 AM IST

தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் 12 எண்ணம் பிராணிகள் நலம் பேணுதல், வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தெரு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே முகாமிற்கு பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள தெரு நாய்களை கொண்டு வந்து, அதற்கு தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

மேலும் செய்திகள்