< Back
மாநில செய்திகள்
இலவச பொது மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

இலவச பொது மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
31 Dec 2022 12:15 AM IST

ஆலடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

ஆலங்குளம்:

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா 18-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நல்லூர் வைத்தியலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளியில் ஆலடி அருணா அறக்கட்டளை, ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமான வைகுண்ட ராஜா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொருளாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆலடி அருணா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முகாமில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பா, நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சன், பஞ்சாயத்து தலைவர்கள் ரவணசமுத்திரம் உசேன், பாப்பான்குளம் முருகன் திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரி சுப்பு, மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், இளைஞர் அணி சிவகுமார், முன்னாள் துணைச் செயலாளர் மதியழகன், மாஞ்சோலை துரை, முன்னாள் அவை தலைவர் தங்கபாண்டியன், கிளைச் செயலாளர் முத்துக்குட்டி முன்னாள் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கப்பழம், அத்தியூத்து செயலாளர் செல்லக்காளி, காளத்திமடம் முத்து செல்வம், வடிவேல் முருகன், கடங்கநேரி செயலாளர் துரைராஜ் பாண்டியன், ஆழ்வை ஒன்றிய பிரதிநிதி கோதர் ஷா அலி, பொட்டல்புதூர் ஜமாத் உறுப்பினர் விசுவாசம், காங்கிரஸ் மாநில இலக்கிய அணி துணை தலைவர் ஆலடி சங்கரய்யா, வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், தி.மு.க. நல்லூர் கிளைச் செயலாளர் அருணாசலம், சுந்தர்ராஜ், கண்ணன், கமலக்கண்ணன், தங்கராஜ், கருப்பசாமி, பெரியசாமி, சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலடி அருணா செவிலியர் கல்லூரி மற்றும் ரஞ்சித், பஞ்சு அருணாசலம், ஜெபராஜன் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்