< Back
மாநில செய்திகள்
பொது மருத்துவ முகாம்
கரூர்
மாநில செய்திகள்

பொது மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
28 Aug 2023 11:46 PM IST

பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

தோகைமலை அருகே கள்ளை ஊராட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தோகைமலை ஏ.பி.ஜே. மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் கள்ளை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா என்கிற சிங்கமுத்து தொடங்கி வைத்தார். தோகைமலை ஒன்றியக் குழு துணை தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரப்பன், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோகைமலை ஏ.பி.ஜே. மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் கோபிநாத், இலக்கியா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சளி, இருதய நோய் கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கண்புரை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்