< Back
மாநில செய்திகள்
குன்னத்தில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குன்னத்தில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
22 Jun 2023 7:05 PM GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி குன்னத்தில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. எனவே குன்னம் தாலுகாவை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6 மற்றும் தேசிய அடையாள அட்டையை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்