< Back
மாநில செய்திகள்
தளவாயில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

தளவாயில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்

தினத்தந்தி
|
22 Jun 2023 7:03 PM GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தளவாயில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்டத்தில் தளவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர்கஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்