< Back
மாநில செய்திகள்
பேராம்பூர், மண்டையூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பேராம்பூர், மண்டையூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
17 March 2023 7:34 PM GMT

பேராம்பூர், மண்டையூரில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியம், பேராம்பூர் சமுதாயக்கூடத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் கண் பார்வை குறைபாடு உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் மண்டையூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் இலவச பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்