ஈரோடு
அந்தியூரில் இலவச மருத்துவ முகாம்; கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
|அந்தியூரில் இலவச மருத்துவ முகாம்; கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் தபால் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களுக்கு கோவை தனியார் மருத்துவமனை டாக்டர் குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
முன்னதாக அ.தி.மு.க. கொடியை கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். முகாமில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கே.எஸ்.மோகன்குமார், அந்தியூர் நகரச் செயலாளர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் குருராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் டி.எஸ்.பால்சாமி, இளைஞர் அணி நகரச் செயலாளர் மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் நாராயணன், தேவராஜ், துணைச் செயலாளர் எஸ்.ஜி.சண்முகானந்தம், ஒன்றிய பொருளாளர் ஜீவா லோகநாதன், முருக பிரகாஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.