சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு
|மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகிறார்கள். அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலமாக சென்று விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவுகளையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 14ம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு உட்பட்ட 25 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 'தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் வரும்14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இம்முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
வடசென்னை மாவட்டம்:
1. வார்டு -46
முகவரி: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர் நிலை பள்ளி அருகில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
2. வார்டு - 45
முகவரி: P.B. ரோடு, கரிமேடு, வியாசர்பாடி, தீயணைப்பு நிலையம் அருகில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
3. வார்டு- 35
முகவரி: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், பள்ளிவாசல்அருகில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
4. வார்டு - 72
முகவரி: 9, கஸ்தூரிபாய் காலனி ஏ பிளாக், கண்ணிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி
5. வார்டு- 75
முகவரி: சுப்புராயம் 4-வது தெரு, திரு.வி.க.நகர் தொகுதி
6. வார்டு - 65
முகவரி: முத்துமாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், எஸ்.பி.ஐ அருகில் கொளத்தூர் தொகுதி
7. வார்டு - 41
முகவரி: கருமாரியம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில், கொருக்கு பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதி
தென்சென்னை மாவட்டம்:
8. வட்டம்-141
முகவரி: காமராஜ் காலனி, (தி.நகர் பேருந்து நிலையம் அருகில்), தி.நகர் தொகுதி
9. வார்டு - 133
முகவரி: ஆனந்தன் தெரு, (முப்பத்தம்மா கோவில் அருகில்), தி.நகர் தொகுதி
10. வட்டம் - 134
முகவரி: ஐந்து விளக்கு, (புண்ணியகோடி கல்யாண மண்டபம்), தி.நகர் தொகுதி
11. வட்டம்-134
முகவரி: பிருந்தாவன தெரு, ஹவுசிங் போர்டு அருகில், தி.நகர் தொகுதி
12. வட்டம் - 130
முகவரி: அம்மன் கோயில் தெரு, கிழக்கு (வடபழனி முருகன் கோவில் அருகில்), தி.நகர் தொகுதி
13. வட்டம் - 135
முகவரி: 83 வது தெரு மேல் புதூர், (அசோக் நகர்), தி.நகர் தொகுதி
14. வட்டம் -131
முகவரி: 61வது தெரு (அம்மா உணவகம் அருகில்), நல்லாங்குப்பம், தி. நகர் தொகுதி
15. வட்டம் -180
முகவரி: திருவான்மியூர் இ.சி.ஆர். சாலை, ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில், வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
16. வட்டம்-178
முகவரி: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பேருந்து நிலையம் அருகில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
17. வட்டம் -121
முகவரி: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி
18. வட்டம்-123
முகவரி: லாக்நகர், மந்தவெளி ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி
19. வட்டம் -139
முகவரி: பாரதிதாசன் காலனி ஜாஃபர்கான் பேட்டை அருகில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி
20. வட்டம்-140
சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி
21. வார்டு-120
முத்தையா தோட்டம் அருகில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி
மத்திய சென்னை மாவட்டம்:
22. வார்டு- 58, வார்டு-99, வார்டு - 77
முகவரி - ஐயப்ப மைதானம், திரு நாராயண குரு சாலை, பெரியமேடு, சூலை, சென்னை டவுட்டன் பாலம் அருகில், எழும்பூர் சட்டமன்ற தொகுதி
23. வார்டு -108
முகவரி-எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல் மங்களபுரம் போலீஸ் பூத் அருகில். எழும்பூர் சட்டமன்ற தொகுதி
24. வார்டு- 95, வார்டு - 84
முகவரி- திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி
25. வார்டு - 98
முகவரி- குட்டியப்பன் தெரு, பம்பிங் ஸ்டேஷன், அயனாவரம் மனநிலை காப்பகம் அருகில் அயனாவரம், கீழ்ப்பாக்கம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி
ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.