< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
2 July 2023 4:07 AM IST

செண்பகராமநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது,

இட்டமொழி:

நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, பஞ்சாயத்து தலைவர் முருகம்மாள் சிவன்பாண்டியன் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரியில் ம.தி.மு.க. சார்பில் மாநில கவர்னரை நீக்கக்கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன், ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், நிர்வாகிகள் பேச்சிமுத்து, எழுத்தாளர் மதுரா, தி.மு.க. ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, காங்கிரஸ் தமிழ்ச்செல்வன், அழகியநம்பி, சி.பி.எம். முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துரை, சுந்தர், வேலையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்