< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
|20 April 2023 3:12 AM IST
கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து காரிகோவில் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இட்டமொழி:
ராதாபுரம் யூனியன் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து காரிகோவில் கிராமத்தில் தமிழக அரசின் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் ஒழிப்பு பற்றிய துண்டுபிரசுரத்தையும் பொதுமக்களுக்கு வழங்கினார். முகாமில் காசநோய் முதுநிலை சிகிச்சை இயக்குனர் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் சிவ ஆனந்த் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.