< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
16 April 2023 2:01 AM IST

இலவச மருத்துவ முகாம் நடந்தது.

வடக்கன்குளம்:

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் ஆவரைகுளம் சேகரம் மற்றும் பெல் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் ஆவரைகுளம் டி.டி.டி.ஏ. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சேகர குரு ஜோசுவா கோல்டுவின் ஜெபம் செய்தார். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஞான திரவியம் முகாமை தொடங்கி வைத்தார். பெல் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயம் ஜூலியட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆவரைகுளம் பரிசுத்த மாற்கு ஆலய வாலிபர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்