தென்காசி
இலவச மருத்துவ முகாம்
|பாவூர்சத்திரம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அன்புக்கரங்கள் அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் சார்பில், பாவூர்சத்திரம் அருகே உள்ள அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவி முத்துமாலை மதிசெல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்சிங் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் தலைவர் டாக்டர் செய்யது சுலைமான், டாக்டர் அப்துல் அஜீஸ், டாக்டர் ராஜசேகரன், புஷ்பலதா ஜான், பார்வதி சங்கர், பிரின்ஸ் யோக்நாத், பால்ராஜ், ரூபஸ் ராஜதுரை, சிவச்சந்திரன், ராஜகுமாரி நவின், வெண்ணிலா, ராஜேஸ்வரி, பார்த்திபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். அன்பு கரங்கள் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். மேலும் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு சேர்கள் வழங்கப்பட்டன. கரிசலூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளிக்கு கற்பித்தல் உபகரணம் வாங்க ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. முடிவில், ஆசிரியர் தங்கத்துரை நன்றி கூறினார். முகாமில் 200-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.