< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
26 Feb 2023 1:28 AM IST

கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கல்லிடைக்குறிச்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கல்லிடைக்குறிச்சி இயக்கம்சாரா இளைஞரணி, நெல்லை காவேரி மருத்துவமனை சார்பில், இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கல்லிடைக்குறிச்சி இயக்கம்சாரா இளைஞரணி, நெல்லை காவேரி மருத்துவமனை சார்பில், இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.எம்.எஸ்.கிளினிக் அசன் அலி, இயக்கம்சாரா இளைஞரணி தலைவர் அசாருதீன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தார். காவேரி மருத்துவமனை டாக்டர்கள் பிரபாகரன், அசோக் பிரகாஷ், ஜெயவர்ஷினி, தீபக்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இயக்கம்சாரா இளைஞரணி துணைத்தலைவர் கமால், துணை செயலாளர்கள் ஆசிப், கோபி விநாயகம், பீர் முகம்மது, முருகன், அசன், துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் அமீன், அறங்காவலர் குழு தலைவர் சொரிமுத்து, காவேரி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயக்கம்சாரா இளைஞரணியினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்