< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
16 Feb 2023 12:15 AM IST

கடையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.

கடையம்:

வெங்காடம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். துணை தலைவர் சித்ரா பாபு முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் நெல்லையப்பபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், வட்டார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் முகமது முபாரக், செவிலியர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டனர்.


மேலும் செய்திகள்