தென்காசி
இலவச மருத்துவ முகாம்
|கடையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கடையம்:
சிவசைலம் அவ்வை ஆசிரம டாக்டர் சவுந்தரம் சிறப்பு பள்ளி, நண்பர்கள் ரத்ததான கழகம் மற்றும் சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் இயன்முறை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு இலவச மருத்துவ முகாம் கடையம் எஸ்.டி.சி. கிளை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
ஆசிரம துணை தாளாளர் பாலமுருகன் வரவேற்றார். ரத்ததான கழக தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பொருளாளர் ஹயாத் அன்சர், நண்பர்கள் இரத்ததான கழக உறுப்பினர் ஹமீது ஹம்சத் அலி, சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாகிப், அண்ணாத்துரை, சசிகுமார், அர்ஜூனன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் ஷியாம் சுந்தர் மற்றும் வினிதா சிகிச்சை அளித்தனர். முகாமில் சிகிச்சை பெற்ற பயனாளிகள் ஆசிரம செல்வன் அ. சுவாமிநாதன் ஆரோக்கிய மையத்தில் செயல்படும் இயன்முறை மருத்துவ பிரிவில் இலவச தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.