< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
11 Feb 2023 12:15 AM IST

இலவச மருத்துவ முகாம் நடந்தது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாண்டியராஜன், சாமுவேல், ஞானராஜ், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மாடசாமி, சுகாதார பார்வையாளர் ஜெயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்