< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
|21 Nov 2022 1:10 AM IST
வள்ளியூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
வள்ளியூர் தெற்கு:
உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அன்னை அமராவதி மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின.
டாக்டர் சங்கரன், ரோட்டரி சங்க தலைவரும், மேக்ரோ கல்லூரி நிறுவன தலைவருமான பொன்தங்கதுரை குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். கிங்ஸ் பள்ளி தாளாளர் ரோட்டரியன் நவமணி வாழ்த்துரை வழங்கினார். நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேச்சு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க செயலர் சுதிர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் ராமகிருஷ்ணன், அருண் பிரகாஷ், அசோக் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.