ராமநாதபுரம்
இலவச மருத்துவ முகாம்
|தொண்டியில் த.மு.மு.க. மருத்துவ சேவை அணி சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தொண்டி,
தொண்டியில் த.மு.மு.க. மருத்துவ சேவை அணி சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி தலைமை தாங்கினார். நகர தலைவர் செய்யது அப்துல் காதர் வரவேற்றார். மருத்துவ முகாமை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காரைக்குடி அப்போலோ பீச் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதில் மருத்துவமனை மேலாளர் டாக்டர்கள் செல்வகுமாரி, லாவண்யா, கோகுல கண்ணன், முகமது ஆஷிக் மணிகண்டன், ரவி லாவண்யா தங்க மணிகண்டன், டாக்டர் ராகுல், டாக்டர் ஆசை ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மாநில பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன், தி.மு.க. நகர செயலாளர் இஸ்மத் நானா, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்தன், இந்து மகாசபை துணைத் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மைதீன் நன்றி கூறினார்.