தென்காசி
இலவச மருத்துவ முகாம்
|கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்
கடையநல்லூர்:
கடையநல்லூரில் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை மற்றும் ஷிபா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு அறக்கட்டளையின் கவுரவ தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். டாக்டர் அராபாத், பள்ளியின் நிர்வாகி ஹசன் மக்தூம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், ஓய்வு பெற்ற சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா முகையதின், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க அப்துல் காதர், உஸ்மான் அலி, முஸ்லிம் லீக் முன்னாள் நகர செயலாளர் அப்துல் லத்தீப், கவுன்சிலர்கள் முஹம்மது அலி, செய்யது அலி பாத்திமா, முகையதீன் கனி, அறக்கட்டளை தலைவர் ஹாஜா மைதீன், சேயன் இப்ராஹிம், ரஹ்மத்துல்லாஹ், முகமது ஷா, முகமது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் மருத்துவர்கள் அகமது யூசுப், பாலா, நெற்கரேஸ், ஸ்டாலின் ஜோஸ், பழனியாண்டி, சிவஜோதிகுமார், பிரலவிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.
முகாமில் சுதர்சன், ராதாகிருஷ்ணன், ஜெபா, வீரகுமார், ஜானகிராமன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
எக்கோ பரிசோதனை, இ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது.