தென்காசி
இலவச மருத்துவ முகாம்
|கடையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே கோவிந்தபேரி ஊராட்சி மன்றம், கன்னியாகுமரி மாவட்டம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவிந்தபேரி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் இசேந்திரன் வரவேற்றார். மருத்துவர்கள் கலைவேந்தன், ஜெனிஷ் பாபு, அபினேஷ், டயானா பாபு, வீர லட்சுமணன், ஆகியோரது தலைமையில் பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் மருத்துவ பிரிவு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், வெள்ளத்துரை, சுந்தர், ராமசாமி, பூலோக பாண்டியன், மாணிக்கம், முத்துராஜ், கோமு, மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியை- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் நன்றி கூறினார். முகாமில் கோவிந்தபேரி, ராஜாங்கபுரம், மந்தியூர், பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், ரவணசமுத்திரம், மீனாட்சிபுரம், நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கிராம மக்கள் கலந்து கொண்டனர்.