< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
18 July 2022 1:08 AM IST

பிராஞ்சேரியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

சேரன்மாதேவி:

பிராஞ்சேரி அம்மன் கோவில் திடலில் கோபாலசமுத்திரம் கிராம உதயம், வைகறை ஓமியோபதி மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கோபாலசமுத்திரம் தி.மு.க. பேரூர் கழக செயலாளர் வானுமாமலை முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார்.

வைகறை ஓமியோபதி மருத்துவமனை டாக்டர்கள் அனுசியா, கோபிநாத், மாரியப்பன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆறுமுகத்தாய், சமூக ஆர்வலர் மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்