< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
22 May 2022 8:37 PM IST

கடையநல்லூர் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.

அச்சன்புதூர்:

தென்காசி சாந்தி மருத்துவமனை, கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து இலவச பன்நோக்கு மருத்துவ முகாமை நடத்தியது. கடையநல்லூர் முத்துசாமிபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அந்தோணி வரவேற்று பேசினார்.

டாக்டர்கள் தமிழரசன், அன்பரசன், செல்வரங்கராஜூ, தமிழருவி, கவுதமி, முத்துக்குமாரசாமி, பிரவீன் குமார், பிரவீன் கிருஷ்ணா, தேவிஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


மேலும் செய்திகள்