< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 Oct 2023 7:00 PM GMT

மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் மாநகராட்சி பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஷாருக் அப்பாஸ் தலைமை தாங்கினார்.

மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், கவுன்சிலர் ரசூல் மைதீன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் கிருஷ்ண பாரத், காயத்ரி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர் உமர் பாரூக், மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், பழனி பாபா பேரவை செயலாளர் ரபீக், மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்