< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
|25 Sept 2023 12:15 AM IST
கடையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடையம்:
கடையம் அருகே கோவிந்தபேரியில் ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியில் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்றார். இதில் பள்ளி நிர்வாகி அல்போன்ஸ், ஆசிரியர் அந்தோணி ராஜ், சுப்பையா, சிங்கக்குட்டி, மாரிதுரை, சிவா, சப்பானி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மகளிர் மருத்துவர் பெல்லாகிளாடிஸ், கண் மருத்துவர் மேஷாக் பீட்டர் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை கூறினர். ஆசிரியை வேலம்மாள் நன்றி கூறினார்.